Connect with us

Television

விஜய் டிவியில் ‘பாரதி கண்ணம்மா’ புதிய தொடர்

Published

on

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா என்ற புத்தம் புதிய தொடர் வரும் பிப்ரவரி 25ம் தேதி முதல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

கண்ணம்மா என்ற இளம் பெண் அனைவருக்கும் உதவும் நல்ல குணம் கொண்டவர். சற்று கருத்த நிறம் உள்ளவள் என்பதால் சமுதாயத்தில் சில விமர்சனங்களை சந்திக்கிறாள்.

கண்ணம்மாவுக்கு அஞ்சலி என்ற மாற்றாந்தாய் சகோதரி இருக்கிறாள். அவள் புறத்தோற்றம் தான் ஒரு பெண்ணுக்கு அழகு என்ற எண்ணம் கொண்டவள்.

கண்ணம்மாவுக்கு நல்ல உள்ளம் கொண்ட பாரதி என்ற ஒரு மாப்பிள்ளை அமைகிறது . அதன் பின் அவள் வாழ்க்கையும் பாரதி என்ற கணவனின் வாழ்க்கையும் எவ்வாறு பயணிக்கிறது என்பதை இத்தொடரின் பார்க்கலாம்.

பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். இவர் ‘மேயாத மான்’ படத்தில் நடித்தவர். தொடரின் நாயகி கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடிக்கிறார். அஞ்சலியாக சுவீட்டி நடிக்கிறார்.

பிரவீன் பென்னெட் இயக்கும் இத் தொடரின் இசையமைப்பாளர் இளையவன்.

காதல், பாசம், சென்டிமெண்ட் கலந்த தொடராக ‘பாரதி கண்ணம்மா’ இருக்கும்.

Television

கலைஞர் டிவியில் ‘பூவே செம்பூவே’ புதிய தொடர்

Published

on

By

கலைஞர் டிவியில் பூவே செம்பூவே புதிய தொடர்

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புத்தம் புதிய தொடர் ‘பூவே செம்பூவே’.

குடும்ப உறவுக்கும், காக்கிச் சட்டைக்கும் இடையேயான போராட்டத்தை எடுத்துச் சொல்லும் தொடர் இது.

திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .

இதில் நாயகியாக பத்ரா என்ற நேர்மையான இளம் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மௌனிகா நடிக்கிறார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை தட்டிக் கேட்டு அதற்குரிய தண்டனையை வாங்கித் தர துடிக்கும் இவருக்கு, குடும்ப ரீதியாகவும், பணி ரீதியாகவும் சவாலாக விளங்கும் அண்ணி கதாபாத்திரத்தில் உமா மகேஸ்வரி (இ.ஆ.ப)யாக ஷமிதா வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒரு சராசரி தமிழ் குடும்பத்தை பின்புலமாகக் கொண்டு அமைக்கப்பட்ட களத்தில், பணியிலிருக்கும் குடும்பப் பெண்கள் சந்திக்கும் முரண்பாடுகளை மையப்படுத்தி இத் தொடரின் கதை நகர்கிறது.

திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும் ஒரு பெண் தனது கடமையை செவ்வனே செய்து, தனது குடும்ப மானத்தை எப்படி காப்பாற்றுகிறாள் என்பதை பல்வேறு எதிர்பாராத திருப்பங்களோடு சொல்லி இருக்கிறார்கள்.

தனது கணவன் மீதான காதலுக்கிடையே, கடமையை ஆற்ற பாடுபடும் பத்ரா, உமா மகேஷ்வரியால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறாள் ?, தனது கணவனின் அன்பையும் குடும்பத்தினரின் மனதையும் எப்படி வெல்கிறார் ?, அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ?, என்பதே இத் தொடரின் கதை.

லைட் சவுண்ட் & மேஜிக் நிறுவனம் தயாரிக்கும் இத் தொடருக்கு சார்லஸ் திரைக்கதை அமைத்திருக்கிறார். இவர் ஏற்கனவே காத்து கருப்பு, ஜீ பூம் பா, ரோஜா கூட்டம் மற்றும் என் தோழி, என் காதலி, என் மனைவி உள்ளிட்ட பல்வேறு சூப்பர்ஹிட் தொடர்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத் தொடர்பற்றி பற்றி அவர் கூறுகையில், “தங்கப்பதக்கம் மற்றும் கௌரவம் படங்களில் நடிகர் திலகத்தின் கதாபாத்திரம் போன்று, ஒரு பெண் கதாபாத்திரத்தை உருவாக்க வேண்டும் என்பது எனது நீண்ட கால அவா. அதனை பூவே செம்பூவே தொடர் நிச்சயம் நிறைவேற்றி வைக்கும் என்பதோடு, நேயர்கள் விரும்பும் தொடராகவும் இது அமையும் என்பதில் ஐயமில்லை.

மௌனிகா, ஷமிதா ஆகிய இருவருமே அவர்களது கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார்கள். அவர்களது திரைப் பயணத்தில் பெயர் சொல்லும் தொடராக இது நிச்சயம் இருக்கும்,”. என்கிறார்.

இந்த நெடுந்தொடரை ‘குள்ள நரி கூட்டம்’ படத்தை இயக்கிய ஸ்ரீ பாலாஜி இயக்குகிறார்.

Continue Reading

Tamil Cinema News

பிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்

Published

on

By

பிக் பாஸ் 3 - நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் இன்று (5 ஆகஸ்ட் 2019) நடிகர் சரவணன் திடீரென வெளியேற்றப்பட்டார்.

கடந்த வாரம் மீரா மிதுன், சேரன் சம்பந்தப்பட்ட சண்டையில், கமல்ஹாசன் பேருந்துகளில் பெண்கள் பயணிப்பதைப் பற்றிப் பேசிய போது, சரவணன், கல்லூரியில் படித்த போது பெண்களை உரசுவதற்காக பேருந்தில் சென்றுள்ளேன் என்ற பொருள்படி பேசினார்.

அப்படிப் பேசியதற்கு பின்னர் மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கான நாமினேஷன் கூட முடிந்தநிலையில், இன்றைய நிகழ்ச்சியின் கடைசியில், கன்பெஷன் ரூமுக்கு நடிகர் சரவணனை அழைத்த பிக் பாஸ், பெண்களைப் பற்றித் தவறாகப் பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றுவதாக தெரிவித்து, அவரை அப்படியே வெளியே வரவழைத்தனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் அவருடைய நெருங்கிய நண்பர்களான கவின், சாண்டி உள்ளிட்டவர்களுக்கும், மற்ற போட்டியாளர்களுக்கும் கூட வீட்டுக்குள் சென்று விடை பெறக் கூட முடியாமல் அவர் அப்படியே வெளியேறியுள்ளதாகத் தெரிகிறது.

எலிமினேஷனில் வெளியேற்றப்படாத காரணத்தால் அவர் வெளியேறும் போது கமல்ஹாசனிடம் கூட பேசிவிட்டுச் செல்ல முடியாது. கமல்ஹாசன் சொன்ன ஒரு உதாரணத்திற்கு நகைச்சுவையாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு அவர் இளம் வயதில் செய்த ஒரு விஷயத்தை சொல்லி மாட்டிக் கொண்டு இப்போது வெளியேறியிருக்கிறார் சரவணன்.

சரவணன் வெளியேறியது மற்ற போட்டியாளர்களுக்கு எப்படி இருந்தது என்பது நாளைய நிகழ்ச்சியில்தான் தெரிய வரும்.

Continue Reading

Television

கலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது

Published

on

By

கலைஞர் டிவியில் இங்க என்ன சொல்லுது புதிய நிகழ்ச்சி

வாழ்க்கை என்பதே நமக்கு வாய்ப்பதை நாம் தேர்ந்தெடுக்கும் ஒரு கலை. நமது தேர்வுகள் பல நேரம் நன்மை பயக்கலாம், சில நேரம் தவறாகவும் அமையலாம்.

எது எப்படி இருந்தாலும் நமது தேர்வு எப்படி அமையும் என்பதை யாராவது முன்கூட்டியே யூகிக்க முடியுமா ?. அப்படிப்பட்ட யூகங்களை மையப்படுத்தி, வித்தியாசமான ஒரு விளையாட்டு நிகழ்ச்சி நடந்தால் அது எப்படி இருக்கும்.

கலைஞர் தொலைக்காட்சியின் புத்தாக்கத்தின் ஒரு பகுதியாக ‘இங்க என்ன சொல்லுது’, என்ற மாறுபட்ட விளையாட்டு நிகழ்ச்சி அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட ஒரு உள் அரங்கில், பிரபல சினிமா நட்சத்திரமான நடிகர் ஜெகன் அவரது தனிப்பட்ட பாணியில் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க யூகங்களை மையப்படுத்தி வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று ஜூலை 21 முதல் ஞாயிறுதோறும் நண்பகல் 12 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது இந்நிகழ்ச்சி.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: