Connect with us

Television

விஜய் டிவியின் புதிய தொடர் ‘தேன்மொழி’

Published

on

விஜய் டிவியின் புதிய தொடர் தேன்மொழி - 4 Tamil Cinema

விஜய் டிவியில் மற்றுமொரு புதிய தொடராக ‘தேன்மொழி’, திங்கள் முதல் சனி வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

ஒரு அழகிய கிராமத்தில் வாழும் தேன்மொழி, ஒரு சுட்டித்தனமான, கவலைகள் ஏதும் வைத்துக் கொள்ளாத ஒரு பெண். அப்பாவின் அளவுக்கடங்காத பாசத்தைக் கொண்ட தேன்மொழி, சூழ்நிலைகள் காரணமாக கிராமத்து பஞ்சாயத்துத் தலைவர் போட்டிக்கு நிற்கிறார்.

தேன்மொழிக்கு அருள் என்னும் ஒரு அரசியல் சார்ந்த பணக்கார வீட்டு பையன் மீது காதல் ஆசை ஏற்படுகிறது, அவனுக்கும் தன் மீது காதல் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார். தேன்மொழி தேர்தலில் வெற்றி பெறுவாள் என கணித்து அவளை அருளுக்குத் திருமணம் செய்து தேன்மொழியை மருமகளாக ஆக்க நினைக்கிறது அருளின் குடும்பம். தேன்மொழிக்கும் அருளுக்கும் திருமணமாகிறது. அருளுக்கு தேன்மொழி மீது காதல் மலருமா ?, தேன்மொழி தனது அரசியல் வாழ்க்கையில் வெற்றி பெறுவாரா ?என்பதுதான் இத் தொடரின் கதை.

இந்த தொடரில் தேன்மொழியாக பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகை ஜாக்குலின் நடிக்கிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு தொலைக்காட்சியில் மீண்டும் களமிறங்கியுள்ளார். அருள் ஆக சித்தார்த் நடிக்கிறார்.

இத் தொடரை கதிரவன் இயக்குகிறார். சிரிப்பு, காதல், மோதல் என பல அம்சங்கள் கொண்ட தொடராக ‘தேன்மொழி’ ஒளிபரப்பாகி வருகிறது.

Television

விஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி

Published

on

By

விஜய் டிவியில் டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் நடன நிகழ்ச்சி

விஜய் டிவியில் புத்தம் புதிய நடன நிகழ்ச்சி ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ வரும் நவம்பர் 17, ஞாயிறு மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 48 அணிகள் போட்டியிட உள்ளன. ஒவ்வொரு வாரமும் ஆறு அணிகள் போட்டியிட்டு அதிலிருந்து சிறந்த மூன்று அணிககள் தேர்வு செய்யப்படும்.

ஹிப்ஹாப், குரூப் வடிவமைத்தல், சினிமா ஸ்பெஷல், கிளாசிக்கல், கிளாசிக்கல் பியூஷன் , நாட்டுப்புற நடனம் ஆகியவை இதில் இடம்பெறும்.

அணிகள் ஆடும் நடனத்திற்கு, நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் மதிப்பெண்களை வழங்குவர். போட்டியின் இறுதியில் வெற்றி பெறும் டான்சிங் சூப்பர் ஸ்டார் அணிக்கு ரூபாய் 25 லட்சம் பரிசாக வழங்கப்படும்.

ரியோ ராஜ், ஆன்ட்ரூஸ் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்கள்.

சாண்டி, டிடி, மஹத், ஆல்யா மானசா, சுனிதா ஆகியோர் இந்த போட்டியின் நடுவர்கள்.

Continue Reading

Television

விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி

Published

on

By

விஜய் டிவியில் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சி

விஜய் டிவியில் ‘குக்கு வித் கோமாளி’ என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது.

இந்த நிகழ்ச்சி முற்றிலும் நகைச்சுவை கலந்த ஒரு சமையல் நிகழ்ச்சியாகும். வரும் நவம்பர் 16 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்.

சமையலில் தேர்ச்சி பெற்ற பிரபலங்கள் சமையலில், எதுவும் தெரியாத கோமாளிகளுடன் சமைக்க வேண்டும். இரண்டு நபர்களும் சேர்ந்து சமைக்கும் சமையல் அறையில் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் வனிதா விஜயகுமார், ரேகா, ரம்யா பாண்டியன், ஞானசம்பந்தம், மோகன் வைத்யா, உமா ரியாஸ், தாடி பாலாஜி, பிரியங்கா, ரோபோ சங்கர் .

கோமாளிகளாக பிஜிலி ரமேஷ், மணிமேகலை, டைகர் தங்கதுரை, பப்பு, ஷிவாங்கி மற்றும் பாலா.

இந்த நிகழ்ச்சியை ரக்ஷன், நிஷா தொகுத்து வழங்குகிறார்கள்.

செஃப் வெங்கடேஷ் பட், செஃப் தாமு ஆகியோர் நடுவர்கள்.

Continue Reading

Television

கோவையில் சூப்பர் சிங்கர் 7 இறுதிப் போட்டி

Published

on

By

கோவையில் சூப்பர் சிங்கர் 7 இறுதிப் போட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி, வரும் நவம்பர் 10ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, கோயம்பத்தூர் கொடிசியா வர்த்தக வளாகத்தில்  நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் மதியம் 3.30 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பாகும்.

கடந்த சில மாதங்களாக பல பாடகர்கள், இசைக் கலைஞர்கள், திரை நட்சத்திரங்கள், வாரம் ஒரு அட்டகாசமான தீம், அற்புதமான போட்டியாளர்கள் என அத்தனை இசை பரிட்சைகளையும் கடந்து வந்து இறுதிப் போட்டிக்கு புன்யா, விவேக், சாம் விஷால், கவுதம், மற்றும் முருகன் ஆகியோர் தேர்வாகி உள்ளார்கள்

இந்த சீசனின் நடுவர்களாக பாடகர்கள் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயால், ஸ்வேதா  மோகன் ஆகியோர்  இந்த போட்டியாளர்களை ஊக்கப்படுத்தியும், உற்சாகப்படுத்தியும் வந்தனர்.

மேலும் இந்த சீசனின் மத்த டாப் போட்டியாளர்கள், சூப்பர்  சிங்கர் பிரபலங்கள், அற்புதமான நடுவர்கள் என பலர் இறுதிப் போட்டியில் இசை விருந்தளிக்க உள்ளார்கள்.

பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இறுதிப் போட்டியில்  இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொள்கிறார் .  மேலும் சூப்பர் சிங்கர் 7 ல் வெற்றி பெறும்  போட்டியாளர் இவரின் இசையமைப்பில் பாடும் வாய்ப்பைப் பெற உள்ளார். அதோடு அவருக்கு 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு வீடும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: