Connect with us

Tamil Cinema News

விகடன் சினிமா விருதுகள் 2018 – முழு விவரம்

Published

on

vikatan cinema awards 2018

தமிழ் வார இதழ்களில் பல வருடங்களாக தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள ஆனந்த விகடன், கடந்த சில வருடங்களாக விகடன் விருதுகள் என்ற பெயரில் சினிமா, இலக்கியம், ஊடகம் ஆகிய துறைகளுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.

அந்த விதத்தில் 2018ம் ஆண்டிற்கான சினிமா விருதுகளின் முழு விவரம்….

சினிமா விருதுகள்

சிறந்த படம் – மேற்குத் தொடர்ச்சி மலை

சிறந்த இயக்குனர் – மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள்)

சிறந்த நடிகர் – தனுஷ் (வடசென்னை, மாரி 2)

சிறந்த நடிகை – த்ரிஷா (96)

சிறந்த இசையமைப்பாளர் – சந்தோஷ் நாராயணன் (வடசென்னை, பரியேறும் பெருமாள், காலா)

சிறந்த வில்லன் – நானா படேகர் (காலா)

சிறந்த வில்லி – வரலட்சுமி சரத்குமார் (சண்டக்கோழி 2, சர்கார்)

சிறந்த குணச்சித்திர நடிகர் – அமீர் (வடசென்னை)

சிறந்த குணச்சித்திர நடிகை – ஈஸ்வரி ராவ் (வடசென்னை)

சிறந்த நகைச்சுவை நடிகர் – யோகிபாபு (கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள்)

சிறந்த நகைச்சுவை நடிகை – ரேவதி (குலேபகாவலி)

சிறந்த அறிமுக இயக்குனர் – லெனின் பாரதி (மேற்குத் தொடர்ச்சி மலை)

சிறந்த அறிமுக நடிகர் – ஆதித்யா பாஸ்கர் (96)

சிறந்த அறிமுக நடிகை – ரைசா வில்சன் (பியார் பிரேமா காதல்)

சிறந்த குழந்தை நட்சத்திரம் – தித்யா பாண்டே (லட்சுமி)

சிறந்த ஒளிப்பதிவு – நீரவ் ஷா (2.0)

சிறந்த படத் தொகுப்பு – ஷான் லோகேஷ் (ராட்சசன்)

சிறந்த கதை – மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள்)

சிறந்த திரைக்கதை – வெற்றிமாறன் (வடசென்னை)

சிறந்த வசனம் – பா.ரஞ்சித், மகிழ்நன் பா.ம., ஆதவன் தீட்சண்யா (காலா)

சிறந்த கலை இயக்கம் – ஜாக்கி (வடசென்னை)

சிறந்த ஒப்பனை – பானு, ஏ.ஆர். அப்துல் ரஸாக், லெகசி எப்எக்ஸ் (2.0)

சிறந்த சண்டைப் பயிற்சி – திலீப் சுப்பராயன் (வடசென்னை, காலா, செக்கச் சிவந்த வானம்)

சிறந்த நடன இயக்கம் – ஜானி (குலேபகாவலி)

சிறந்த ஆடை வடிவமைப்பு – ஏகா லகானி (செக்கச் சிவந்த வானம்)

சிறந்த அனிமேஷன் விஷுவல் எபெக்ட்ஸ் – ஷங்கர், வி.ஸ்ரீனிவாஸ் மோகன் (2.0)

சிறந்த பாடலாசிரியர் – கார்த்திக் நேத்தா (அந்தாதி, காதலே காதலே, லைப் ஆப் ராம் – 96)

சிறந்த பின்னணிப் பாடகர் – அந்தோணி தாசன் (சொடக்கு மேல – தானா சேர்ந்த கூட்டம்)

சிறந்த பின்னணிப் பாடகி – சின்மயி (96)

சிறந்த தயாரிப்பு – மேற்குத் தொடர்ச்சி மலை (விஜய்சேதுபதி புரொடக்ஷன்ஸ்)

சிறந்த படக்குழு – 96

அதிக கவனம் ஈர்த்த படம் – 2.0

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் – கடைக்குட்டி சிங்கம்

 

Continue Reading

Tamil Cinema News

சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்

Published

on

By

சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்

புதிய கல்விக் கொள்கை குறித்த பல கருத்துக்களை நடிகர் சூர்யா சில தினங்களுக்கு முன்பு பேசியிருந்தார். நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வு ஆகியவற்றிற்கு சூர்யா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவருடைய கருத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

சூர்யாவின் கருத்துக்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு கிடைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் அவரைப் பாராட்டி வருகிறார்கள். அன்புமணி ராமதாஸ், சீமான் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகர் கமல்ஹாசன் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

“ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்துவருகிறார்கள்.

எனவே கல்வி குறித்துப் பேசுவதற்கான உரிமை சூர்யாவுக்கு உண்டு.

புதிய கல்விக் கொள்கை குறித்த தம்பி சூர்யாவின் கருத்துகள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு.

மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்ற ‘வரைவு அறிக்கை’ மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை மக்கள் நீதி மையம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

Tamil Cinema News

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்

Published

on

By

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - துல்கர் சல்மானின் 25வது படம்

வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஆண்டோ ஜோசஃப் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’.

தேசிங் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி அகத்தியன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

படம் பற்றி வியாகாம் 18 ஸ்டுடியோஸின் தலைமை செயல் அதிகாரி அஜித் அந்தரே கூறும்போது,

“ஒரு திரைப்பட தயாரிப்பாளராக, மொழிகளைத் தாண்டி பார்வையாளர்களை ஈர்க்கக் கூடிய கதைகளைச் சொல்வதை விட திருப்தி எதுவும் இல்லை. தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு கொடுக்கப்படும் கதைகளைக் கண்டு நான் எப்போதுமே ஈர்க்கப்பட்டிருக்கிறேன். ஆண்டோ ஜோசஃப்புடன் இணைந்து நாங்கள் தயாரிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர், ஆண்டோ ஜோசஃப் கூறுகையில்,

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்‘ போன்ற ஒரு படத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் பெருமைப்படுகிறேன். இது வியாகாம் 18 ஸ்டுடியோஸ் உடன் எனது முதல் திரைப்படம், மற்றும் மூன்றாவது முறையாக நான் துல்கர் சல்மானுடன் பணிபுரியும் படம். இந்த படத்திற்கு இதை விட ஒரு சிறந்த கூட்டணி கிடையாது,” என்றார்.

இயக்குனர் தேசிங் பெரியசாமி கூறும்போது,

“எனது முதல் படம் இந்தியாவின் முன்னணி ஸ்டுடியோக்களில் ஒன்றான வியாயாகாம் 18 ஸ்டுடியோஸால் வெளியிடப்படுவது என் கனவு நனவான தருணம். இந்த திரைப்படத்தை தயாரித்த ஆண்டோ ஜோசஃப் பிலிம் நிறுவனத்துக்கும், அதை மேலும் உயர்த்திய வியாகாம் 18 ஸ்டுடியோவுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மிகவும் ரசிக்கப்படக் கூடிய ஒரு ஜாலியான இந்தப் படம் பார்வையாளர்களை மகிழ்விக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்,” என்றார்.

துல்கர் சல்மான் கூறுகையில்,

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ஒரு சுவாரஸ்யமான கதை. இதுபோன்ற அருமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் ஒரு பகுதியாக இருந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது எனது 25 வது படம் என்பது என்னை மேலும் சிறப்பாக உணர வைக்கிறது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்துக்காக வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஆண்டோ ஜோசஃப் ஆகியோருடன் இணைந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்படம் சொல்லும் காதலை பார்வையாளர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.

Continue Reading

Tamil Cinema News

ஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’

Published

on

By

ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் - 4 Tamil Cinema

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட் அடுத்து தயாரிக்க உள்ள படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ‘பொன்மகள் வந்தாள்’ எனப் பெயர் வைத்துள்ளார்கள். இயக்குனர்கள் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள். இயக்குனர், நடிகர் பிரதாப் போத்தனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அறிமுக இயக்குனர் ஜேஜே. பிரட்ரிக் இப்படத்தை இயக்குகிறார். ‘96’ படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பல தரமான படங்களை ஒளிப்பதிவு செய்த ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார், 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனரும் தயாரிப்பாளருமான சூர்யா, நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் ஹரி, பிரம்மா, முத்தையா, T.J.ஞானவேல், 2 D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, எஸ்.ஆர் பிரகாஷ் பாபு விநியோகஸ்தர் B.சக்திவேலன் ஆகியோரும், மற்றும் படத்தின் நட்சத்திரங்கள் ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் படத்தின் இயக்குநர் பிரட்ரிக் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!