Connect with us

Movie Reviews

விக்ரம் வேதா விமர்சனம்

Published

on

vikram vedha

ஒரு நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே நடக்கும் ராமர், லட்சுமண காலத்து கதைதான்.

கதை சொல்லலுக்காக விக்ரம், வேதாளத்தைத் துணைக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். விக்ரமிடம் வேதாளம் சிக்கும் போதெல்லாம் ஒரு கதையைச் சொல்லி தப்பிவிடுகிறது. கடைசியில் விக்ரம் வேதாளம் கேட்டும் கேள்விக்கு பதில் சொல்கிறதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் மாதவனுக்கு வட சென்னையை ஆட்டிப் படைக்கும் தாதா விஜய் சேதுபதியை என்கவுன்டர் செய்ய வேண்டும் என்பது லட்சியம். அதற்காக அவர் தலைமையிலான அணியினர் போராடுகிறார்கள். அந்தப் போராட்டத்தில் மாதவனின் நண்பனான பிரேம் சுட்டுக் கொல்லப்படுகிறார். இரண்டு முறை மாதவன், விஜய் சேதுபதியைப் பிடித்து விடுகிறார். ஆனால், இரண்டு முறையும் ஒரு கதையைச் சொல்லி தப்பித்து விடுகிறார். ஒரு முறை விஜய் சேதுபதி கொடுத்த ஒரு தகவலால் தன்னைச் சுற்றி ஏதோ ஒரு தவறு நடப்பதாக உணர்கிறார் மாதவன். நண்பன் பிரேம் சுட்டுக் கொல்லப்பட்டதிலும் ஏதோ மர்மம் இருக்கிறது என நினைக்கிறார். அவற்றையெல்லாம் மாதவன் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரம் ஆக மாதவன் விறைப்பாக இருக்கிறார். ‘இறுதிச் சுற்று’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சரியான ஒரு கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து அசத்தலாக நடித்திருக்கிறார். அந்தப் பணிக்கேயுரிய இறுக்கம் முகத்தில் இருக்கிறது. மனைவியிடம் வரும் செல்லச் சண்டைக்கும், வேதாவிடம் போடும் கோபச் சண்டைக்கும் நிறையவே வித்தியாசம் காட்டியிருக்கிறார். மாவனின் ‘தி பெஸ்ட்’ கதாபாத்திரங்களில் இந்த விக்ரமும் இருக்கும்.

நாயகனாக தனித்து உயர்ந்து நிற்கும் நேரத்தில் இப்படி ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதே பெரிய விஷயம். அந்த வேதா கதாபாத்திரத்தில் அவரைத் தவிர வேறு யாரும் இந்த அளவிற்கு சிறப்பாக நடித்திருக்க முடியாது. படத்திற்குப் படம் மாறுபட்ட கதாபாத்திரத்தைத் தேர்வு செய்யும் அந்த தாகத்திற்கு தனி சல்யூட் விஜய் சேதுபதி.

மாதவனின் மனைவியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத். இருவருக்கும் துளி கூட ஜோடிப் பொருத்தம் இல்லை. 40 வயதைக் கடந்த தோற்றத்தில் இருக்கும் மாதவனுக்கு 20 வயதான ஷ்ரத்தா ஜோடி. ஷ்ரத்தாவிற்கு புடவை கட்டிவிட்டால் மட்டும் வயது கூடிவிடுமா என்ன ?.

விஜய் சேதுபதியின் தம்பியாக கதிர், இவரின் காதலியாக வரலட்சுமி சரத்குமார். தன்னை விட மூத்த வரலட்சுமியைக் காதலிக்கிறார் கதிர். எதற்கு இந்த வயது வித்தியாசக் காதல், அதனால் படத்திற்கு என்ன நன்மை.

பிரேம் கொஞ்சமாக வந்தாலும் நிறைவு. அந்த மலையாள தாதா ஹரிஷ் பெராடி, மாதவனின் உயர் அதிகாரி ரவி காலே ஆகியோரும் அவரவர் கதாபாத்திரத்தில் அசத்தல்.

சாம் சி.எஸ். பின்னணி இசை படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பைத் தருகிறது. வினோத்தின் ஒளிப்பதிவும், மணிகண்டனின் வசனமும் ரசிக்க வைக்கின்றன.

 

Movie Reviews

சாம்பியன் – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 3/5

Published

on

By

சாம்பியன் விமர்சனம் - 4 Tamil Cinema

கதை

சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த விஷ்வாவுக்கு சிறு வயதிலிருந்தே கால்பந்தின் மீது பேராசை. ஆனால், அவருடைய அம்மா கால்பந்து விளையாடக் கூடாதென தடுக்கிறார். அம்மாவுக்குத் தெரியாமல் விளையாடி பள்ளி மற்றும் கல்லூரி அணியில் இடம் பிடிக்கும் அளவிற்கு முன்னேறுகிறார் விஷ்வா. பிரபல கோச் நரேன் நடத்து அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற ஆரம்பிக்கிறார். முக்கிய போட்டிகளில் விளையாடும் அளவிற்கு தேர்வாகும் சமயம், தன் அப்பா கொலை செய்யப்பட்டதுதான் இறந்தார் என்ற உண்மை விஷ்வாவுக்குத் தெரிய வருகிறது. கால்பந்து விளையாடுவதை விட அப்பாவைக் கொன்றவர்களை பழி வாங்கத் துடிக்கிறார். இதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.

நடிப்பு

அறிமுக நாயகன் விஷ்வா, முதல் படத்திலேயே பொருத்தமான கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து பொருத்தமாக நடித்திருக்கிறார். கால்பந்து விளையாட ஒரு வருடம் பயிற்சி எடுத்தாராம். அதன் பலன் திரையில் தெரிகிறது. அடுத்தடுத்து நல்ல கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்தால் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடிக்கலாம்.

விஷ்வாவுக்கு அடுத்து படத்தில் கோச் ஆக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நரேன். அந்த கோச் ஆகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. வில்லனாக ஸ்டன் சிவா, வட சென்னை பகுதி கவுன்சிலர் மற்றும் ரவுடியாக மிரட்டுகிறார்.

சௌமிகா, மிருணாளினி என இரண்டு ஹீரோயின்கள். சினிமாத்தனமில்லாமல் இருக்கிறார்கள், நடிக்கிறார்கள்.

இசை, மற்றவை

அரோல் கொரேலி இசையில் பின்னணி இசை குறிப்பிடும்படி உள்ளது.  கால்பந்தாட்டக் காட்சிகள், கதை நகரும் மற்ற இடங்கள் என உள்ளதை உள்ளபடி காட்டியிருக்கிறது சுஜித் சாரங் ஒளிப்பதிவு.

+

உணர்வுபூர்வமான கதை, யதார்த்தமான கதாபாத்திரங்கள், நட்சத்திரத் தேர்வு

காதல் காட்சிகள் படத்திற்கு தேவையில்லாதது…

Continue Reading

Movie Reviews

காளிதாஸ் – விமர்சனம்

4 Tamil Cinema – Rating – 3.5/5

Published

on

By

காளிதாஸ் விமர்சனம் - 4 Tamil Cinema

கதை

சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் தொடர்ந்து மூன்று பெண்கள் மாடி மீதிருந்து விழுந்து இறந்து போகிறார்கள். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா, அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்பதை இன்ஸ்பெக்டர் பரத் விசாரிக்க ஆரம்பிக்கிறார். டெபுடி கமிஷனர் உத்தரவுப்படி அசிஸ்டென்ட் கமிஷனர் சுரேஷ் மேனனும் விசாரணைக்கு தலைமை ஏற்கிறார். இரவு, பகல் பார்க்காமல் போலீசார் விசாரணையைத் தொடர்கிறார்கள். நான்காவதாக ஒரு கொலை நடக்கும் போது ஒரு துப்பு கிடைக்கிறது. அது என்ன, கொலையாளி யார் என்பதை நாம் எதிர்பார்க்காத கிளைமாக்சுடன் இப்படத்தைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஸ்ரீ செந்தில்.

நடிப்பு

இன்ஸ்பெக்டர் ஆக பரத். ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் முத்திரை பதிக்கும்படியான கதாபாத்திரம். எந்தவித அலட்டலும் இல்லாமல், போலீஸ் என்ற கர்வம் இல்லாமல், ஒரு யதார்த்தமான இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் பரத்தின் நடிப்பு படம் பார்க்கும் அனைவருக்கும் பிடிக்கும்.

அசிஸ்டென்ட் கமிஷனர் ஆக முக்கிய கதாபாத்திரத்தில் சுரேஷ் மேனன், மிடுக்கான நடிப்பு. பரத்தின் மனைவியாக ஆன் ஷீத்தல். ஒரு நடுத்தரக் குடும்பத்து மனைவி, தன் கணவனிடம் என்னவெல்லாம் எதிர்பார்ப்பாரோ அதை எதிர்பார்க்கும் ஒரு இயல்பான கதாபாத்திரம். அறிமுகப் படத்திலேயே அசத்துகிறார் ஆன்.

ஆதவ் கண்ணதாசன் கதாபாத்திரம் மீதுதான் நம் அனைவரின் சந்தேகமும் விழுகிறது. அவர் கொலையாளி ஆக இருப்பாரோ என்ற சந்தேகத்தை பார்வையாளர்களுக்கு தன் திரைக்கதை மூலம் அழுத்தமாய் உணர வைக்கிறார் இயக்குனர். ஆதவ்வின் நடிப்பும் ஆகா சொல்ல வைக்கிறது.

இசை, மற்றவை

த்ரில்லர் படம் என்றால் பின்னணி இசை மிக முக்கியம். அதை உணர்ந்து காட்சிகளின் பரபரப்பை மேலும் கூட்டும் வகையில் இசையமைத்திருக்கிறார் விஷால் சந்திரசேகர். ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, கொலை நடக்கும் இடங்களை பல வித கோணங்களில் படம் பிடித்து காட்சிகள் மூலம் பரபரப்பைக் கூட்டுகிறார். காட்சிகளின் தன்மை சிறிதும் குறையாமல் தெளிவான படத் தொகுப்பைக் கொடுத்திருக்கிறார் புவன் சீனிவாசன்.

+

கதை, திரைக்கதை, நடிப்பு, இயக்கம்

பெரிதாக எதுவுமில்லை

Continue Reading

Movie Reviews

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 3.5/5

Published

on

By

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்

கதை

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்படாமல் விட்ட குண்டுகள் சில இந்திய கடற்கரையில் கரை ஒதுங்குகின்றன. மாமல்லபுரத்தில் அப்படி கரை ஒதுங்கும் ஒரு குண்டு, சென்னைக்கு வந்து, அங்கிருந்து பாண்டிச்சேரிக்கு செல்கிறது. அந்த குண்டடை சென்னையிலிருந்து மற்ற இரும்பு சாமான்களுடன் ஏற்றிச் செல்லும் லாரி டிரைலர் தினேஷுக்கு அந்த குண்டு பற்றி தெரிய வருகிறது. அதை செயலிழக்க வைக்க அவர் முயற்சி செய்கிறார். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

நடிப்பு

தனக்கான கதையும், கதாபாத்திரங்களும் கிடைக்கும் போது தினேஷுக்குள் ஒளிந்திருக்கும் நடிகர் மிக யதார்த்தமாக எட்டிப் பார்க்கிறார். இந்தப் படத்தில் ஒரு நிஜமான இளம் லாரி டிரைவர் எப்படி இருப்பாரோ அப்படியே இருக்கிறார். வாயைத் திறந்தாலே பேசிக் கொண்டே இருக்கும் ஒரு குணம். பல காட்சிகள் அட, அசத்துகிறாரே என சொல்ல வைத்திருக்கிறார்.

நாயகி ஆனந்திக்கு தினேஷைக் காதலிப்பதும், குடும்பத்தினரிடம் திட்டு வாங்குவதும்தான் வேலை. இவருக்கும் தினேஷுக்குமான காதலில் இன்னும் கொஞ்சம் அழுத்தத்தைக் காட்டியிருக்கலாம்.

காயலான் கடை முதலாளியாக மாரிமுத்து, இவர் சொன்னதை அப்படியே செய்து காட்டும் முனிஷ்காந்த் மனதில் பதிகிறார்கள். மற்ற கதாபாத்திரங்களில் ரித்விகா அதிகம் கவர்கிறார். இன்ஸ்பெக்டர் லிஜேஷ் குறிப்பிட வைக்கிறார்.

இசை, மற்றவை

தென்மாவின் இசையில் கதையுடன் சேர்ந்து பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலத்தைக் கொடுத்திருக்கின்றன. கிஷோர் குமார் ஒளிப்பதிவு கதைக்கு என்ன தேவையோ அதனுடன் இயல்பாய் அமைந்துள்ளது. கலை இயக்குனர் ராமலிங்கம் தன் முழு உழைப்பை படத்தில் காட்டியிருக்கிறார்.

+

புதிய கதைக்களம், இயல்பான கதாபாத்திரங்கள், அதில் அனைவரின் சிறந்த நடிப்பு

இடைவேளைக்குப் பின் பயணத்திலேயே நகர்கிறது கதை. திரைக்கதை சிறப்பாக இருந்தாலும் இன்னும்  சில அழுத்தமான காட்சிகள் படத்தில் இருந்திருக்கலாம்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: