Connect with us

Others

நடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’

Published

on

v care vip hair color shampoo

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறியப்படுகின்ற ஆர்கே ஒரு பிசினஸ்மேனும் கூட.

கடந்த 17 வருடங்களாக அவர் நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பூ’ என்கிற புதிய தயாரிப்பை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார் ஆர்கே.

‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது. இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை முதன் முறையாக பொது மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தினார் வி கேர் நிறுவனத்தின் சேர்மனான ஆர்கே.

இந்த அறிமுக நிகழ்ச்சியில் இந்த வி கேர் ஹேர் கலர் ஷாம்பூவை இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் எடுத்துச் செல்லும் நிறுவன தூதராக இணைந்துள்ள பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கலந்துகொண்டு இந்த புதிய ஷாம்பூவை அறிமுகப்படுத்தினார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகரும் விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் விளம்பர மாடலும் சமீபகாலமாக ஐபிஎல் மேன் என அழைக்கப்படுபவருமான சமீர் கோச்சரும் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் அனைவரையும் வரவேற்று பேசிய வி கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரபா ரெட்டி பேசும்போது,

“வி கேர் என்றாலே தனித்தன்மை என உறுதியாக சொல்லலாம். எங்களது ஒவ்வொரு தயாரிப்பும் தனித்தன்மையுடன் இருந்து வருகின்றன. அதேசமயம் மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாகவும் இருந்து வருகின்றன. அந்த வகையில் வி கேர் நிறுவனத்தின் மைல் கல் என்று சொல்லும் விதமாக இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை அறிமுகப்படுத்துகிறோம்.

உடலின் எந்தப்பகுதியிலும் உள்ள நரைமுடிகளுக்கு இதை எளிதாக பயன்படுத்தமுடியும். அதனால் இனி டை என்கிற விஷயத்திற்கு வேலையே இல்லை. ஷாம்பூ மட்டும் தான்,” என்றார்.

பாலிவுட் நடிகர் சமீர் கோச்சர் பேசியதாவது,

“ஆர்கே என்னை சந்தித்து இந்தத் தயாரிப்பு பற்றி விளக்கிய போது ஆச்சரியமாக இருந்தது. நம்புவதற்கு கொஞ்சம் சிரமமாகவும் இருந்தது. ஆனால் இதை நானே அனுபவப்பூர்வமாக பயன்படுத்திய போது அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. ஆர்கேவின் இந்தத் தயாரிப்பு உலக அளவில் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை,” எனக் கூறினார்.

நடிகர் விவேக் ஓபராய் பேசும்போது,

“இன்று உலகம் முழுதும் காலை உணவாக ரசித்து சாப்பிடும் இட்லி சாம்பாராகட்டும், இன்று உலகம் முழுதும் அறியப்படும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகட்டும், தென்னிந்தியா எப்போதுமே மிகச் சிறந்த தயாரிப்புகளைத் தந்துள்ளது.

ஏன் என்னுடைய அம்மா, மனைவி எல்லோருமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான். முடி என்பது உடலின் ஒரு பகுதி மட்டுமல்ல, அது ஒரு மனிதனின் தன்னம்பிக்கை. அதனால் தான் அவன் தன்னுடைய நரை முடியை மறைக்க ரொம்பவே மெனக்கெடுகிறான். அந்த வகையில் நடிகர் ஆர்கே ஒரு பிசினஸ்மேனாக என்னிடம் வந்து இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை பற்றி சொன்னதும் ஆரம்பத்தில் நான் நம்ப மறுத்தேன். காரணம் அமோனியா இல்லாமல், பிபிடி இல்லாமல் ஒரு ஹேர் டை என்பது எப்படி சாத்தியமாகும்..?

ஆனால் நானே அதை நம்பும்விதமாக எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்து, அது சாத்தியம் தான் என நிரூபித்து காட்டினார் ஆர்கே. நான் எப்போதுமே ஒரு விஷயத்தை மக்களுக்கு எந்தவிதமாக பயன்படும் என்கிற கண்ணோட்டத்தில் பார்ப்பவன்.

அதில் எனக்கும் ஆர்கேவுக்கும் ஒரேவிதமான சிந்தனை என்பதை அறிந்துகொண்டேன். இப்போது சொல்கிறேன். இந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக மட்டுமல்ல, இந்த நிறுவனத்தின் பங்குதாரராகவும் என்னை இணைத்துக் கொள்ளவும் ஆசைப்படுகிறேன்.. அந்தளவுக்கு இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுதும் உள்ள மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையப்போகிறது,” என்றார்.

இந்த நிகழ்வில் வி கேர் நிறுவனத்தின் சேர்மனும் நடிகருமான ஆர்கே பேசியதாவது,

“அன்றும் இன்றும் எப்போதுமே வெள்ளையனை வெளியேற்றுவது என்பது ஒரு பிரச்சனைதான். அதே போலத்தான் நரைமுடி என்பது மனிதர்களுக்கு ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. என்றும் இளமையாக ஒருவரை அடையாளப்படுத்துவது அவரது கருகரு தலைமுடிதான். ஆனால் இன்றைய சூழலில் 16 வயது முதல் உள்ள இளைஞர்களுக்கு கூட நரை விழுந்துவிடுகிறது.

இன்று பலரும் டை அடிப்பதற்காகப்படும் சிரமங்களையும், அதனால் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் மனதில் வைத்து இதற்கு மாற்றாக ஒன்றை கண்டுபிடிக்கவேண்டும் என்கிற உத்வேகத்தால் பல மாத பரிசோதனைக்குப் பின்பு உருவான தயாரிப்புதான் எங்களின் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ. டை அடிக்கும்போது கறை படியுமோ, அலர்ஜி ஆகுமோ என்கிற கவலை இனி இல்லை. காரணம் இதில் அந்த பாதிப்புகளை ஏற்படுத்தும் அமோனியா, பிபிடி என எதுவுமே சேர்க்கப்படவில்லை.

வழக்கமான ஷாம்பூவை பயன்படுத்துவதைப் போல இதை பயன்படுத்த முடியும். சுமார் ஆறு மாத காலமாக ஒரு லட்சம் பேருக்கு இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை கொடுத்து, அவர்கள் இதை பயன்படுத்தி இதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே இதை இப்போது நேரடி மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகிறோம்.

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பது அரசியலில் மட்டுமல்ல, வியாபாரத்திலும் கூட அப்படித்தான். எங்களுடைய தயாரிப்புகள் தென்னிந்தியாவில் ரொம்பவே ஸ்ட்ராங்கான இடத்தை பிடித்திருக்கின்றன.

ஆனால் எல்லோருக்கும் பாராளுமன்றத்திற்கு செல்ல ஆசை இருப்பதுபோல, எனக்கும் எங்களது தயாரிப்புகளை இந்திய அளவில் கொண்டு செல்லவேண்டும் என்கிற ஆசை நீண்ட நாட்களாவே இருந்து வருகிறது.

தற்போது இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள பலரும் தங்களது தலைமுடி நரைப்பது என்கிற பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள் என்பதால் எங்களது புதிய தயாரிப்பான இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை இந்திய அளவில், மட்டுமல்லாமல் இன்டர்நேஷனல் லெவலில் எடுத்து செல்வதற்கு ஒரு மனிதர் தேவைப்பட்டார். அவர்தான் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்.

காரணம் எந்த விஷயத்தையும் சமூகத்திற்கு பயன் தருமா ? என்கிற கண்ணோட்டத்தில் அணுகும் நபர் அவர். இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ பற்றி சொன்னதும் அவரும் மற்றவர்களை போல ஆரம்பத்தில் நம்பவில்லை. ஒருமுறைக்கு இருமுறையாக அவரிடம் தொடர்ந்து மணிக்கணக்கில் விவாதித்தேன்.

இதன் நம்பகத்தன்மையை அவர் உணர்ந்தபின்னர், இதை உலகெங்கிலும் கொண்டு செல்லும் தூதராக மட்டுமல்ல, இதோ இந்த நிறுவனத்தின் பங்குதாரராக தன்னை இணைத்துக்கொள்கிறேன் என இப்போது சொன்னாரே, அந்த அளவுக்கு இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ அவரை ரொம்பவே ஈர்த்துவிட்டது.

டை அடிக்கும்போது கருப்பு தோல் மீது படும்போது அப்படியே படிந்துவிடும். ஆனால் இந்த ஷாம்பூ முடிக்கு மட்டுமே கருப்பு கலரைத் தரும். கிளவுஸ் கூட இல்லாமல் சாதாரணமாக கைகளில் எடுத்து பயன்படுத்தும் ஹேர் கலர் ஷாம்பூ என்னால் கண்டுபிடிக்கப்பட்டு உருவாக்கப்பட்டு பரிசோதனைக்குப் பிறகு மக்களிடம் கொண்டு வந்திருக்கிறோம். ஒரு முக்கிய மக்களின் தேவையை நிவிர்த்தி செய்யப் பயன்படும் பொருளைக் கண்டுபிடித்ததில் உண்மையிலேயே மகிழ்ச்சி கொள்கிறேன்.

இதற்காக ஒரு வருடம் படத்தில் கூட நடிக்கவில்லை. இனி இதை மக்களிடம் சேர்த்துவிட்டு மிகப்பெரிய பட்ஜெட், மிகப் பிரம்மாண்டமான படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன்.

அந்த படம் பலரின் கண்களை திறக்கும் படமாக இருக்கும். அதன் அறிவிப்பு ஓரிரு மாதங்களில் வரும்.

ஒரு நடிகர், ஒரு ஃபார்முலாவை கண்டுபிடிப்பதும் அது தயாரிப்பாக உருமாறுவதும் இதுவே முதல்முறை என நினைக்கிறேன். அவ்விதத்தில் உண்மையாகவே பெருமை கொள்கிறேன்.

இந்தியாவில் உள்ள 130 கோடி பேரில் சுமார் 40 கோடி பேர் ஹேர் டை அடிக்கிறார்கள். இதில் வெறும் ஒரு கோடி பேர் எங்களது இந்த புதிய தயாரிப்பை உபயோகப்படுத்தினாலே எங்களது டர்ன் ஓவர் 500 கோடியைத் தாண்டும். அதை இலக்காக வைத்து நாங்கள் நகர இருக்கிறோம்,” என்றார் ஆர்கே.

Others

வேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்

Published

on

By

vels kindle kids

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும் வேல்ஸ் கல்விக் குழும நிறுவனருமான டாக்டர் ஐசரி.கே.கணேஷ் ‘கிண்டில் கிட்ஸ்’ (Kindle Kids International Curriculum) என்ற பாடத் திட்டத்தை பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி அன்று ஈஞ்சம்பாக்கம் வேல்ஸ் சர்வதேசப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.

Hindu In-School நாளிதழ் ஆசிரியர் கிருத்திகா ரெட்டி தலைமை விருந்தினராகவும், டாக்டர் ஆண்டோனியோஸ் ரகுபான்ஸே, (தலைவர், பிரிட்டிஷ் கவுன்சில் கல்விப் பணி) சிறப்பு விருந்தினராய் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்த சர்வதேசப் பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரிய பணியாற்றிய பெருமக்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

உலகளாவிய பாலர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் உள்ள சி.பி.எஸ்.இ (CBSE), ஐ.சி.எஸ்.ஈ (ICSE), ஐ.பி (IB) போன்ற பல்வேறு பாடத் திட்டத்தை பயன்படுத்துவோரும் பின்பற்றும் வகையில் ஒரு முழுமையான பாடத் திட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள முதல் தரம் வாய்ந்த பாலர் பள்ளியான வேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் வெற்றிகரமாய் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வெற்றி ஆசியாவில் உள்ள பள்ளிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது மட்டுமன்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தலைசிறந்த கல்வியாளர்களும் கல்வி நிறுவனங்களின் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் .

வேல்ஸ் கல்வி நிறுவனம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக 25000 – த்திற்கும் மேற்பட்ட மாணவர்களுடன் 25 கல்வி நிறுவனங்கள் மற்றும் 5000க்கும் மேற்பட்ட ஆசிரிய பெருமக்களுடன் கல்வித் துறையில் தனது சீரிய பணியை தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் சிங்கப்பூரில் பாலர் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ‘ஒரே குடையின் கீழ் ‘ என்ற நிலையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

Continue Reading

Others

உச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…!

Published

on

By

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய புராடக்டை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார் ஆர்கே..

‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பும் அதன் பயன் குறித்தும் ஆர்.கேவிடம் கேட்டோம்..

“இன்றைய தேதியில் எல்லோருமே நரைமுடி என்பதை கருப்பாக்க, கலராக்க வேண்டுமென நினைக்கிறார்கள். உலகத்திலேயே ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் இளமைக்கும் முதுமைக்குமான வித்தியாசத்தை உணர்த்துவது நரைமுடி தான். நரைமுடி வந்துவிட்டதற்காக வருத்தப்படுகிறவர்கள் பலரும் அதை மறைப்பதற்கு அதிகப்படியான நேரம், பணம் செலவிடுகிறார்கள்.

இன்றைக்கு நாற்பது சதவீத மக்கள் நரைமுடியை மறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்பெல்லாம் வயதானவர்களுக்கு நரை வந்தது போய், தற்போது டீனேஜில் உள்ள இளம் வயதினருக்கும் நரைமுடி வர ஆரம்பித்துவிட்டது. ஆக, இன்று நரைமுடி என்பது அழகைவிட மிகப்பெரிய பிரச்சனையாக இருந்துகொண்டு இருக்கிறது. ஒருவர் கருப்பா, சிவப்பா என்கிற அழகு பிரச்சனையையெல்லாம் தாண்டி இருதரப்பினருக்குமே பொதுவான பிரச்சனையாகவே நரைமுடி மாறிவிட்டது.

உலகம் முழுவதிலும் இதற்கு தீர்வாக இப்போதுவரை இருப்பது ‘டை அடித்தல்’ ஒன்று மட்டுமே. ஒரு பியூட்டி பார்லருக்கு சென்றால் அங்கே உள்ளவர்கள் கைகளில் க்ளவுஸ் அணிந்துகொண்டு, இரண்டுவிதமான கெமிக்கல்களை எடுத்து, அதை சரியான விகிதத்தில் கலந்து, அங்கேயே காற்றில் சற்று உலரவைத்து அதன்பின்னர் நமது தலைமுடியில் அதை அடித்துவிடும் முறை தான் தொழில் ரீதியாக இருக்கிறது.

ஆனால் பெரும்பாலான மக்கள் அங்கே ஒருமுறை செல்வதற்கே ஆயிரக்கணக்கில் செலவாகிறது என்பதாலும், மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் நினைக்கிறார்கள். அதனால் இதை பயன்படுத்திக்கொண்டு வியாபாரிகள் இதே பொருட்களை, மக்களே பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கடையில் விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.. ஆனாலும் கடைகளில் செய்வது போன்றே கைகளில் க்ளவுஸ் அணிந்துகொண்டு, இரண்டுவிதமான கெமிக்கல்களை எடுத்து அதை சரியான விகிதத்தில் கலப்பது, தனக்குத்தானே டை அடித்துக்கொள்ள முடியாதது என பலவித சிரமத்தை நாம் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.

அதுமட்டுமல்ல இந்த வகை டை கைகளில் ஓட்டும் தன்மை கொண்டவை. தோலில் ஒட்டும் டை தான் இன்றுவரை உலகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. அமோனியா அல்லது ஏதாவது ஒரு கெமிக்கல் அதில் கலந்திருக்கும்.. கண் எரிச்சல் ஏற்படும்.. சதவீத அடிப்படையில் சரியாக கலக்காவிட்டால் இருக்கும் முடியை இழந்துவிட கூடிய அபாயமும் இருக்கிறது. இதனாலேயே பலர் தங்களது முடியை இழந்து பரிதாபகரமான தோற்றத்தில் வலம் வருகிறார்கள்.

சரி டையே அடிக்கவேண்டாம் என விட்டுவிட்டால், நண்பர்கள் வட்டாரத்தில் அதற்கும் கேலிப்பேச்சுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதையும் மீறி டை அடித்துக்கொண்டுவந்தால் ‘கருப்பு ஹெல்மெட்’ போட்டிருக்கிறான் என பலர் கிண்டலுக்கு ஆளாவதும் உண்டு. எது அழகு என நினைக்கிறோமோ அதுவே நமக்கு அசிங்கமாக மாறிவிட கூடிய சூழல் தான் இதனால் உருவாகும்.

இதற்கெல்லாம் தீர்வாகத்தான் உலகத்திலேயே இதுவரை யாருமே கண்டுபிடிக்காத ஒரு புது தொழில்நுட்பத்தை நாம் கண்டுபிடித்திருக்கிறோம்.. அதுதான் விஐபி ஹேர் கலர் ஷாம்பூ இதை கண்டுபிடித்ததில் ஒரு இந்தியனாக, அதிலும் தமிழ்நாட்டில் இருந்து உலகத்திற்கு இந்த கண்டுபிடிப்பை கொண்டுசெல்லும் ஒரு தமிழனாக நான் பெருமைப்படுகிறேன்.

இதுவரை டை அடித்துவிட்டு குளிக்கும்போது ஷாம்பூ போடுவது தான் வழக்கமாக இருக்கிறது. ஆனால் ஷாம்பூ போட்டு குளித்தால் எப்படி அழுக்கெல்லாம் மறைகிறதோ, அதேபோல நரைமுடியும் மறைகின்ற மாதிரி கண்டிஷனருடன் சேர்த்தே இந்த ஷாம்பூவை வழங்குகின்றோம். இதற்கு கிளவுஸ் தேவையில்லை, கிண்ணம் தேவையில்லை, பிரஷ் தேவையில்லை, கண் எரிச்சல் கிடையாது, இன்னொருவரின் உதவி தேவையில்லை, தோலில், முகத்தில் கருப்பாக ஒட்டிக்கொள்ளுமே, பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்குமே என்கிற கவலை கிடையாது.

வழக்கமான ஷாம்பூவை பயன்படுத்துவதை போல இதை பயன்படுத்த முடியும்.. கைகளை தண்ணீரால் ஈரமாக்கிக்கொண்டு நமக்கு தேவையான அளவு விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை கைகளில் விட்டு, அதில் வரும் நுரையை உலர்ந்த நம் தலைமுடியில் ஷாம்பூ போலவே தேய்த்துக்கொண்டு கால்மணி நேரம் கழித்து குளித்துவிட்டு வந்தால் நரைமுடி இருந்த இடமே இல்லாம் போயிருப்பதை கண்கூடாக பார்க்கலாம். இதை ஒருமுறை பயன்படுத்தினால் சுமார் இருபது நாட்களுக்கு குறையாமல் நரைமுடியை தெரியவிடாமல் தடுக்கும்.

இன்று பல பிரபலங்கள் கைகளில் பார்த்தோம் என்றால் நரைமுடி இருக்காது.. காரணம் wax எனும் செயற்கை முறைதான். ஆனால் தலைமுடி, தாடி இவற்றையும் தாண்டி நெஞ்சு முடி, கை முடிக்கும் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை பயன்படுத்தலாம் என உலகத்திலேயே முதன்முறையாக நிரூபித்துள்ளோம். சுருக்கமாக சொன்னால் உச்சிமுதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு சரியான தீர்வுதான் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ” என பெருமை பொங்க கூறுகிறார் ஆர்கே…

Continue Reading

Others

தென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com

Published

on

By

festoo launch

மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஆன்லைன் வர்த்தகத்தில் புதிய புரட்சியாக, கிடைக்காத பொருட்களே இல்லாத நிலையை உருவாக்கும் விதத்தில் தொடங்கப்பட்டிருக்கும் புதிய ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம். (festoo.com) சென்னையை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனம் தான் தென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியாவில் செயல்பட்டு வரும் சில ஆன்லைன் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களாகவும், வட இந்திய நிறுவனங்களாகவும் உள்ள நிலையில், தென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் நிறுவனமாக தொடங்கப்பட்டிருக்கும் festoo.com நிறுவனம் இன்று (பிப்.21) சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள், மாமிசங்கள், மீன் வகைகள், ஆடைகள் என 35000 க்கும் மேற்பட்ட பொருட்களைக் கொண்ட இந்நிறுவனத்தில் தோசை மற்றும் இட்லி மாவு போன்ற சாதாரண பொருட்களும் விற்கப்பட உள்ளது.

மேலும், வெளி மார்க்கெட்டில் விற்கப்படும் விலையை விட பல சலுகைகளோடு காய்கறிகள் விற்கப்படுவதோடு, தூய்மையான முறையில் பேக் செய்யப்பட்டு டெலிவரி செய்வது தான் festoo.com நிறுவனத்தின் தனிச்சிறப்பு.

மற்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களிடம் வரும் ஆர்டரை வியாபாரிகளுக்கு அனுப்பி அவர்கள் மூலமாகவே பொருட்களை டெலிவரி செய்வார்கள். ஆனால், festoo.com நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் ஆர்டர் பொருட்களை தங்களது
நிறுவனத்திற்கு வர வைத்து, அவற்றின் தரத்தை சோதித்து பார்த்த பிறகே, பேக் செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.

இதற்காகவே சென்னை முழுவதும் 200 அவுட்லேட்களை இந்நிறுவனம் திறந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் festoo.com நிறுவனம் மூலம் ஆர்டர் கொடுக்கும் பொருட்கள் ஒரு மணி நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் சென்றடையும்.

தற்போது சென்னையில் அவுட்லேட்களை தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்தக்கட்டமாக தமிழகம் முழுவதும் தொடங்குவதோடு, கர்நாடகா, ஆந்திரா என்று தென்னிந்தியா முழுவதும் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வியாபாரம் என்ற நோக்கில் மட்டும் செயல்படாமல், பிறருக்கு தொழில் செய்ய வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும் festoo.com நிறுவனம், தங்களது டெலிவரி அவுட்லேட்களை பிராஞ்சஸ் கொடுக்கவும் முடிவு செய்துள்ளது. இதனால் குறைந்த முதலீட்டில் நிரந்தர
லாபம் பெறும் தொழிலை பிறருக்கு ஏற்படுத்தி கொடுப்பதோடு, டெலிவரி பணியை மேற்கொள்பவர்களுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பால், மறைமுகமாகவும் பலருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிறது.

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட festoo.com நிறுவனம் தங்களது பிராண்ட் பிரத்யேகமாக இருக்க வேண்டும் என்பதற்காக சர்வதேச கட்டமைப்போடு தொடங்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!