Connect with us

Tamil Cinema News

‘விவேகம்’ – ஒரு வார வசூல் விவரம்

Published

on

vivegam-one-week-collection

சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்த ‘விவேகம்’ படம் ஆகஸ்ட் 24ம் தேதி உலகம் முழுவதும் சுமார் 3000 தியேட்டர்களுக்கு மேல் வெளியானது.

வழக்கம் போலவே அஜித் படம் என்றால் அற்புதமான ஓபனிங் இருக்கும். அது இந்தப் படத்திற்கும் இருந்தது. முதல் நான்கு நாட்களில் சுமார் 100 கோடியைக் கடந்த படம் அடுத்த நான்கு நாட்களில் 25 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது.

படம் வெளியான முதல் ஒரு வாரத்தில் ‘விவேகம்’ படத்தின் உலக வசூல் 125 கோடியைத் தொட்டுள்ளது. இதன் மூலம், அஜித்தின் முந்தைய வசூல் சாதனையான ‘வேதாளம்’ படத்தின் வசூலான 120 கோடி ரூபாயை ‘விவேகம்’ படம் முறியடித்துள்ளது.

தமிழ்நாட்டில் 55 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்தப் படம் இதுவரை 63 கோடி வரை வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள். சுமார் 90 கோடி வரை வசூலித்தால்தான் படத்தின் அசல் தொகையை வசூலிக்க முடியும். அதற்கு இன்னும் 27 கோடி வரை வசூலாக வேண்டும். இந்த வார இறுதிக்குள் இன்னும் 10 கோடியை வசூலிக்கலாம். அதன் பிறகும் வசூலித்தால்தான் படம் வாங்கியவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாமல் இருக்கும்.

ஆனாலும், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இப்படம் வியாபாரத் தொகையையும் வசூலித்து லாபத்தைக் கொடுத்துவிட்டது என்கிறார்கள்.

கேரளாவில் முதல் நாளில் சுமார் 2.9 கோடி வசூலித்த இந்தப் படம் அடுத்த நாட்களில் வீழ்ந்துவிட்டது. ஆகவே, அங்கு நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

வெளிநாடுகளில் அமெரிக்கா வசூல் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு பெரிய அளவில் நஷ்டம் வரும் என்பதே உண்மை. படத்தை வாங்கிய வினியோகஸ்தர் ஒரு வாரம் ஆகியும் படத்தின் வசூல் நிலவரத்தை இதுவரை வெளியிடாததில் இருந்து அதைத் தெரிந்து கொள்ளலாம்.

மற்றபடி, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிரான்ஸ், அரபு நாடுகளில் குறிப்பிடத்தக்க லாபத்தைக் கொடுத்துவிட்டதாம்.

திரையுலக வட்டாரங்களில் விசாரித்தவரையில் படத்தின் மொத்த பட்ஜெட் 80 கோடி வரை ஆகியுள்ளது. படத்திற்கான வியாபாரம் 120 கோடியைத் தாண்டி நடந்துள்ளது. பட்ஜெட்டையும் கொஞ்சம் குறைத்து, வியாபரத்தையும் 100 கோடிக்குள் முடித்திருந்தால் ‘விவேகம்’ படம் வாங்கிய அனைவருக்குமே லாபத்தைக் கொடுத்திருக்கும் என்ற ஒரு கணக்கைச் சொல்கிறார்கள்.

மேற்கண்ட விவரங்கள் திரையுலக வட்டாரங்களில் திரட்டப்பட்டவை. படத்தின் தயாரிப்பாளர் அறிவிக்கும் வசூல் விவரங்களே அதிகாரப்பூர்வமானது.

Tamil Cinema News

ஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை

Published

on

By

ஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘நேர்கொண்ட பார்வை’.

இப்படத்தை பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ் பெற்ற ‘லீ கிரான்ட் ரெக்ஸ்’ தியேட்டரில் திரையிட்டார்கள்.

படத்தில் அஜித்தைப் பார்த்த ஆர்வக் கோளாறு ரசிகர்கள், தியேட்டர் ஸ்கிரீனை சேதப்படுத்தியுள்ளார்கள். அதைத் தொடர்ந்து அந்த தியேட்டர் நிர்வாகம் இனி தமிழ்ப் படங்களைத் திரையிட மாட்டோம் என அறிவித்துவிட்டதாம்.

இதை பிரான்ஸ் நாட்டில் உள்ள தமிழ்ப் படங்களின் வினியோக நிறுவனம் அவர்களது டுவிட்டரில் அறிவித்துள்ளது.

அந்த தியேட்டரில் இதற்கு முன்பு ‘கபாலி, மெர்சல், சர்கார், பேட்ட, விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை வெளியிட்ட வினியோகஸ்தரிடம் தியேட்டர் ஸ்கிரீனை மாற்றித் தரச் சொல்லி நிர்வாகம் கேட்டுள்ளதாம். 7000 யூரோ மதிப்பில், அதாவது 5 லட்சம் செலவில் அந்த ஸ்கிரீனை மாற்றித் தர அவர்களும் சம்மதம் சொல்லிவிட்டனராம்.

இனி, அந்த புகழ் பெற்ற தியேட்டரில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட மாட்டாது.

Continue Reading

Tamil Cinema News

சுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’

Published

on

By

சுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’

டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘ஆக்ஷன்’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு முழு நீள ஆக்ஷன் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறதாம்.

இப்படத்தில் விஷால் மிலிட்டரி கமாண்டோ ஆபீஸராக நடிக்கிறார். ஒரு உண்மையைக் கண்டு பிடிக்க பல நாடுகள் செல்கிறார். அங்கே ஆக்ஷ்ன், சேசிங் என விறுவிறுப்பான ஸ்டன்ட் காட்சிகளை அன்பறிவ் அமைத்துள்ளார்கள். சமீபத்தில் தேசிய விருது பெற்ற இவர்கள் இப்படத்தில் பல வித்தியாமான சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்களாம்.

இதில் பல காட்சிகளில் விஷால் டூப் போடலாமலேயே நடித்திருக்கிறாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி, அசர்பைசான், கேப்படோசியா, பாகு, இஸ்தான்புல், தாய்லாந்து நாட்டில் உள்ள கிராபி தீவு, பேங்காக் உள்ளிட்ட இடங்களில் 50 நாள்கள் நடைபெற்றுள்ளன.

மேலும் இந்தியாவில் ஜெய்ப்பூர், ரிஷிகேஷ் ,டேராடூன், ஹைதராபாத், சென்னை, போன்ற இடங்களிலும் 50 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளதாம்.

விஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக மலையாளத்தில் பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இவர்களுடன் யோகி பாபு, ராம்கி, சாயாசிங், ஷாரா, பழ .கருப்பைய்யா, பிரபல இந்தி நடிகர் கபீர் சிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Continue Reading

Tamil Cinema News

‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து

Published

on

By

சர்க்கார் வழியில் முடிந்த கோமாளி கதை பஞ்சாயத்து

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படம் ‘சர்க்கார்’. அந்தப் படத்தின் கதை தன்னுடையது என வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தமிழ்த் திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் அதற்கான பஞ்சாயத்து நடைபெற்றது. படத்தின் ஆரம்பத்தில் வருண் ராஜேந்திரனுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் ஒரு கார்டு போடப்பட்டது.

அது போன வருடம், இந்த வருடம் ‘கோமாளி’ படத்திற்காக மீண்டும் ஒரு திருட்டுக் கதை பஞ்சாயத்து வந்தது. இயக்குனர், நடிகர் பார்த்திபனின் உதவி இயக்குனரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் ‘கோமாளி’ படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

ஏற்கெனவே ரஜினிகாந்த்தை டிரைலரில் கிண்டலடித்தது ஒரு சர்ச்சையாகி அதை முடித்து வைத்தார்கள். கடந்த ஒரு வார காலமாக இந்த கதைத் திருட்டு பஞ்சாயத்து நடந்தது. கடைசியில் ‘சர்க்கார்’ பட வழியில் ‘கோமாளி’ படத்தின் கதைத் திருட்டு பஞ்சாயத்தையும் முடித்து வைத்திருக்கிறார்கள்.

‘கோமாளி’ படத்தின் ஆரம்பத்தில் கிருஷ்ணமூர்த்தியை கௌரவப்படுத்தும் விதத்தில் ஒரு கார்டு போட உள்ளார்களாம்.

திரை மறைவில் சில பல லட்சங்களை கிருஷ்ணமூர்த்திக்கு ‘கோமாளி’ தயாரிப்பாளர் தந்திருக்கலாம் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: