Connect with us

Tamil Cinema News

‘வாட்ச்மேன்’ ஒரு காமெடி, த்ரில்லர் – ஜிவி பிரகாஷ்குமார்

Published

on

வாட்ச்மேன் ஒரு காமெடி, த்ரில்லர் - ஜிவி பிரகாஷ்குமார்

டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், ஜிவி பிரகாஷ்குமார், சுமன், ராஜ் அருண், நீரவ் ஷா மற்றும் பலர் நடிக்கும் படம் வாட்ச்மேன்.

ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் இப்படம் பற்றி தன் அனுபவங்களை ஜி.வி.பிரகாஷ்குமார் கூறினார்.

“விஜய் தான் என்னை திரையில் முதன் முதலாக தோன்ற வைத்தவர். தலைவா படத்தில் தளபதியுடன் ஒரு பாடலில் ஆட வைத்தார். நாச்சியார் படத்தில் என் நடிப்பை பார்த்துதான் இந்த படத்தில் நடிக்கக் கேட்டார். அவர் இயக்கத்தில் நான் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. வாட்ச்மேன் படம் காமெடியுடன் கூடிய திரில்லர். தண்ணீர் கேன் போடும் பையனான நான் இரவில் ஒரு வீட்டுக்குள் போகிறேன். அந்த பங்களாவில் இருப்பவர்கள், நடக்கும் சம்பவங்களை கொண்டு படம் நகரும். புருனோ என்ற நாய் படம் முழுக்க வரும். அது செய்யும் சாகசங்கள் பிரமிக்க வைக்கும்.

நாய்க்கு பயப்படும் ஒருவன் நாயுடனே இரவு முழுக்க இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறான். அந்த நாய் அவனைக் காப்பாற்றத்தான் முயற்சி செய்கிறது. ஆனால் அவனோ அந்த நாயை பார்த்து மிரள்கிறான். இப்படித்தான் கதை போகும். என்னைக் காப்பாற்ற நாய் செய்யும் செயல்களை குழந்தைகள் கைதட்டி ரசிப்பார்கள். அந்த நாயுடன் சுமார் 40 நாட்கள் நடித்தேன். நாய் குழந்தைகள் போலத்தான். அவற்றை அதட்டி மிரட்டி வேலை வாங்க முடியாது. அவற்றின் போக்கில் சென்றுதான் படம் பிடிக்க வேண்டும். புருனோவை நண்பனாக்கிக் கொண்டேன். இருந்தாலும் சில சமயம் முறைக்கும், பயமாக இருக்கும்.

இது ஹாலிவுட் பாணியில் விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படம். இதில் பாடல்கள் வைத்தால் ரசிகர்கள் இருக்கையில் நெளியத் தொடங்கி விடுவார்கள். எனவே இப்படத்தில் பாடல்கள் வைக்கவில்லை. ஒரு விளம்பர பாடல் எடுத்துள்ளோம். இதில் நான், யோகி பாபு, சாயிஷா மூவரும் நடனம் ஆடியுள்ளோம்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் வெளிநாடுகளில் படித்து தொழிலதிபராக இருந்தவர். வெறும் லாப நோக்கத்தோடு மட்டும் சினிமாவுக்கு வராமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தயாரித்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று குறிக்கோள் கொண்டவர். படத்தின் விளம்பரத்துக்காக செய்யும் செலவை நல்ல நோக்கத்தோடு மக்களுக்கு பயன்படும் வகையில் செய்யவேண்டும் என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது.

சமீபத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பொள்ளாச்சியில் இனி அதுபோன்ற சம்பவங்களோ குற்றங்களோ நடக்காத வகையில் கேமராக்கள் பொருத்துகிறார். இது மட்டும் அல்லாமல் கோடைகாலம் என்பதால் ஆங்காங்கே வெயிலில் தவிக்கும் சிறு வியாபாரிகளுக்கு நிழற்குடைகள் அமைப்பது, வாட்ச்மேன்களுக்கு குடை, தொப்பி வினியோகம் என்று நலத்திட்டங்களோடு சேர்ந்த விளம்பரம் செய்கிறார். அவருக்கு என் பாராட்டுகள்.

குழந்தைகள் நம்மை ரசிக்கிறார்கள் என்பதை பொது இடங்களுக்கு செல்லும்போது இதை உணர்கிறேன். அது பத்து ஹிட் படங்கள் கொடுத்த மகிழ்ச்சியைத் தருகிறது. குழந்தைகள் மட்டும் அல்லாமல் குடும்ப ரசிகர்களும் எனக்கு உருவாகி இருக்கிறார்கள். எங்க வீட்டு பையன் மாதிரியே இருக்கேப்பா… என்று சொல்லும்போது உலகிலேயே மகிழ்ச்சியான நபராக உணர்கிறேன்.

குழந்தைகள் மனதை கவர்வது எளிதான காரியம் அல்ல. அது குறைந்த காலகட்டத்திலேயே எனக்குக் கிடைத்திருப்பது கடவுளின் வரம் தான்,” என்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

Tamil Cinema News

சென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு

Published

on

By

சென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு

இந்தியா முழுவதிலும் பல நகரங்களில் தியேட்டர்களை நடத்தி வரும் பிவிஆர் சினிமாஸ் சென்னை, பழைய மகாபாலிபுரம் சாலையில் உள்ள உத்தண்டியில் 10 தியேட்டர்கள் கொண்ட புதிய மல்டி பிளக்ஸ் வளாகம் ஒன்றை இன்று திறந்துள்ளது.

குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ‘பிளே ஹவுஸ்’ வகை திரையரங்கு சென்னையிலேயே இங்கு மட்டும் தான் உண்டு என்பது இதன் சிறப்பம்சம்.

இந்த பிவிஆர் திரையரங்கை பிரசன்னா, சினேகா தம்பதியினர் ரிப்பன் கத்தரித்து, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர். திரையரங்கை திறந்து வைத்து அவர்கள் பேசியதாவது,

“பிவிஆர் இந்தியாவின் மிக முக்கியமான ஒரு அங்கம். அவர்கள் சென்னையில் திறந்திருக்கும் 6வது மல்ட்டிபிளெக்ஸ் இது என்பது சிறப்பான அம்சம். சென்னையின் சத்யம் திரையரங்கம் எங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரையரங்கு. சத்யம் திரையரங்கையும் பிவிஆர் தான் வாங்கி, நிர்வகிக்கிறது என்பதால் பிவிஆர் இன்னும் மனதுக்கு நெருக்கம். ஏற்கனவே கேம் ஓவர் திரைப்படத்தை இங்கு பார்த்தேன்.

மிகச்சிறந்த ஒளி, ஒலி வடிவமைப்பை கொண்டிருக்கிறது. இருக்கைகளும் மிகவும் வசதியாக இருக்கிறது. உலகிலேயே இந்தியர்கள் போல சினிமா விரும்பிகளை எங்கேயும் பார்க்க முடியாது. இந்தியா மாதிரி சினிமாவை கொண்டாடும் ஒரு நாடு உலகிலேயே இல்லை. வெளிநாடுகளில் கூட இந்தியா அளவுக்கு வசதிகளை தரும் திரையரங்குகள் அதிகம் இல்லை. ஆனால் படம் பார்க்கும் ரசிகர்களை மதித்து புதுப்புது அம்சங்களை பிவிஆர் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

சிங்கிள் திரையரங்குகள் பலவும் மூடப்பட்டு, திருமண மண்டபங்களாக மாறி வரும் நிலையில் பிவிஆர் போன்றோர் தொடர்ந்து பெரிய பெரிய மல்ட்டிபிளெக்ஸ் திரையரங்குகளை துவக்குவது சினிமாவுக்கு ஊக்கம் அளிக்கிறது.

10 திரைகள் இருக்கிறது, பெரிய படங்களுக்கு மட்டும் திரையரங்குகளை ஒதுக்காமல் சின்ன படங்களுக்கும் நீங்கள் ஆதரவு தர வேண்டும். எங்கள் வீட்டுக்கு அருகிலேயே இருப்பதால், தொடர்ந்து இங்குதான் படங்களை பார்ப்போம்,” என்றார் நடிகர் பிரசன்னா.

“நான், பிரசன்னா இருவருமே சினிமா பைத்தியம். எந்த ஒரு படத்தையும் முதல் நாளே பார்த்து விடும் அளவுக்கு சினிமா எங்களுக்கு பிடிக்கும். நகருக்குள் இருந்து வெளியே ஈசிஆருக்கு குடிபெயர்ந்தபோது, ஒவ்வொரு சினிமா பார்க்கவும் 40 கிலோமீட்டர் பயணிக்க வேண்டுமே என்ற ஒரு வருத்தம் இருந்தது. நல்ல வேளையாக எங்கள் வீட்டுக்கு அருகிலேயே PVR திரையரங்கை திறந்திருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். சென்னையிலேயே எங்கும் இல்லாமல் முதன்முறையாக குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக ‘பிளே ஹவுஸ்’ என்ற திரையரங்கும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதை பார்க்கவும் மிகவும் ஆவலாக இருக்கிறேன்,” என்றார் நடிகை சினேகா.

Continue Reading

Tamil Cinema News

பிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்

Published

on

By

பிக் பாஸ் 3 - போட்டியாளர்கள் முழு விவரம்

விஜய் டிவியில் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள, கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு வீட்டுக்குள் ஒவ்வொருவராக நுழைந்தவர்கள் விவரம்…

பாத்திமா பாபு – செய்தி வாசிப்பாளர்
லாஸ்லியா – இலங்கை டிவி செய்தி வாசிப்பாளர்
சாக்ஷி அகர்வால் – நடிகை
மதுமிதா – நடிகை
கவின் – நடிகர்
அபிராமி – மாடல் மற்றும் நடிகை
சரவணன் – நடிகர்
வனிதா விஜயகுமார் – நடிகை
சேரன் – இயக்குனர், நடிகர்
ஷெரின் – நடிகை
மோகன் வைத்யா – கர்நாடக இசைப் பாடகர்
தர்ஷன் – இலங்கை மாடல்
சாண்டி – நடன இயக்குனர்
முகின் – மலேசியா பாடகர்
ரேஷ்மா – நடிகை

கடந்த 2 சீசன்களில் முதல் சீசனில் 16 போட்டியாளர்களும், இரண்டாவது சீசனில் 15 போட்டியாளர்களும் நுழைந்திருக்கிறார்கள். இந்த 3வது சீசனில் 15 போட்டியாளர்கள் நுழைந்திருக்கிறார்கள்.

கடந்த 2 சீசன்களில் வெளிநாட்டைச் சேர்ந்த போட்டியாளர்கள் இல்லை. ஆனால், இந்த சீசனில் இலங்கையிலிருந்து இருவரும், மலேசியாவிலிருந்து ஒருவரும் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிகழ்ச்சி இன்று திங்கள் முதல் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

Continue Reading

Tamil Cinema News

பிகில் – இரு வேடங்களில் விஜய் ?

Published

on

By

பிகில் - இரு வேடங்களில் விஜய் ?

எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் பெயர் ‘பிகில்’ என அறிவிக்கப்பட்டு, அதன் முதல் பார்வை சற்று முன் வெளியிடப்பட்டது.

அட்லீ, விஜய் இதற்கு முன்பு கூட்டணி சேர்ந்த ‘தெறி, மெர்சல்’ படங்களின் தலைப்பைப் போன்றே இந்தப் படத்திற்கும் லோக்கலாக பிகில் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், இந்துஜா, ரெபா மோனிக்கா ஜான், வர்ஷா பொல்லம்மா, ராஜ்குமார், தேவதர்ஷினி, யோகிபாபு மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பெரும்பாலான காட்சிகள் மிகப் பெரும் கால்பந்தாட்ட மைதான செட்டில் படமாக்கப்பட்டுள்ளன.

முதல் பார்வை வெளியான பிறகு படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

‘பிகில்’ முதல் பார்வை வெளியான உடனேயே டிவிட்டரில் உலக அளவிலும், இந்திய அளவிலும் முதலிடத்தில் டிரென்டிங்கில் உள்ளது.

இரண்டாவது பார்வை நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக உள்ளது.

இப்படத்தை வரும் தீபாவளி தினமான அக்டோபர் 27ம் தேதி வெளியிட உள்ளார்கள்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!